பிரபல இயக்குனர் 'பத்மஸ்ரீ' கே. விஸ்வநாத் ஹைதராபாதில் காலமானார்
பழம்பெரும் இயக்குனரும் நடிகருமான 'பத்மஸ்ரீ' கே.விஸ்வநாத், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92 வயது மூப்பின் காரணமாக, உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விஸ்வநாத், ஹைதராபாதில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 'சங்கராபரணம்', 'சலங்கை ஒலி', 'சிப்பிக்குள் முத்து' உட்பட பல படங்களை இயக்கிய விஸ்வநாத், பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக, கமல்ஹாசன், கே.பாலசந்தருடன் 'உத்தம வில்லன்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 50 தென்னிந்திய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான, தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரை, சமீபத்தில் கமல்ஹாசன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மறைவிற்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.