
பாலிவுட் நடிகையும், நடிகை கஜோலின் தாயுமான தனுஜா, மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டின் மூத்த நடிகையும், நடிகை கஜோலின் தாயுமான தனுஜா, நேற்று (டிசம்பர் 18,) ஞாயிற்றுக்கிழமை மாலை, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலிவுட்டின் பிரபல நடிகைகள் கஜோல் மற்றும் தனிஷா முகர்ஜியின் தாயார் தான் தனுஜா. அவருக்கு 80 வயது.
வயது மூப்பு தொடர்பான நோய்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஐசியுவில் இருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
"அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் மற்றும் நலமாக இருக்கிறார். கவலைப்பட ஒன்றுமில்லை." என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக PTI தெரிவிக்கிறது.
இருப்பினும், அவர்களிடமிருந்து அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை.
நடிகை தனுஜா, பிரபல நடிகை ஷோப்னா சமர்த்தின் மகள் ஆவர்.
ட்விட்டர் அஞ்சல்
நடிகை தனுஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
As per reports, veteran actress Tanuja rushed to a Mumbai hospital on Sunday evening due to age-related illness#tanuja #kajol #illness #veteranactress #bollywood #ajaydevgan #tanishamukherjee #tanujamukherjee pic.twitter.com/y1sDJ8mVyr
— Calcutta Times (@Calcutta_Times) December 18, 2023