Page Loader
வாரிசு திரைப்படம் பிரைம் வீடியோவில், பிப்.,22 அன்று வெளியாகும் என அறிவிப்பு
விஜய்யின் வாரிசு படம் ஓடிடியில் வெளியாகப்போகிறது

வாரிசு திரைப்படம் பிரைம் வீடியோவில், பிப்.,22 அன்று வெளியாகும் என அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2023
03:13 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியான 'வாரிசு' திரைப்படம், விரைவில் ப்ரைம் வீடியோவில் வெளியாகப்போகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முதல், வாரிசு படத்தை ஒளிபரப்ப போவதாக, அந்நிறுவனம் இன்று (பிப்., 17) அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில், வம்சி இயக்கி இருந்த இந்த படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு இசை தமன். படத்தின் அனைத்து பாடல்களும், யூடியூபில் பல மில்லியன் லைக்குகளை குவித்து வருகிறது. இதனுடன் வெளியான அஜித்தின் துணிவு படம், ஏற்கனவே நெட்ஃபிளிக்சில் வெளியாகி விட்டது. விஜய் அடுத்ததாக, லோகேஷ் கனகராஜுடன் 'லியோ' படத்தில் இணைந்துள்ளார். அதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

வாரிசு திரைப்படம் பிரைம் வீடியோவில்!