
மூத்த நடிகை ஜெயசுதாவிற்கு வெளிநாட்டவருடன் மூன்றாவது திருமணம்!
செய்தி முன்னோட்டம்
தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகர் ஜெயசுதா. சமீபத்தில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தில், விஜய்க்கு தாயாக நடித்திருந்தார் அவர்.
தற்போது நடிகை ஜெயசுதா, வெளிநாட்டவர் ஒருவரை, மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
62 வயதான ஜெயசுதா, ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். அவரது முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்தது.
பின்னர் நிதின் கபூர் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் துரதிருஷ்ட வசமாக, நிதின் 2017-ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பிறகு, தனிமையில் வசித்து வந்த ஜெயசுதா, தற்போது ஒரு வெளிநாட்டவரை மணந்து கொண்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெயசுதாவிற்கு, நிஹார் மற்றும் ஸ்ரேயன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
நடிகை ஜெயசுதாவிற்கு திருமணம்!
Veteran actress #Jayasudha gets married for the third time; ties the knot with a foreignerhttps://t.co/6tK2ADaXUK
— TOI ETimes Telugu (@ETimesTelugu) February 10, 2023