
மீண்டும் பாலாவுடன் இணைந்தது குறித்து கவிதையாய் அறிவித்த வைரமுத்து
செய்தி முன்னோட்டம்
கோலிவுட் இயக்குனர் பாலா, அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து, 'வணங்கான்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
அதன் படப்பிடிப்பு சென்ற மாதம் துவங்கியது. இந்நிலையில், படத்தின் பாடலாசிரியராக வைரமுத்து இணைந்துள்ளார்.
சமீப காலமாக, திரையுலகிலிருந்து ஒதுங்கி இருந்தார் வைரமுத்து. இயக்குனர்களும், படத்தயாரிப்பாளர்களும் புதிய பாடலாசிரியர்களை நாட துவங்கினர்.
தற்போது, நீண்ட இடைவேளைக்கு பிறகு, பாலாவுடன் இணைந்தது குறித்து மகிழ்ச்சியாக அறிவித்தார் கவிஞர் வைரமுத்து.
"பாலா! தேடி வந்தாய்; திகைக்குமொரு கதைசொன்னாய்; இதிலும் வெல்வாய்" என தொடங்கும் கவிதை எழுதி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் வைரமுத்து.
வைரமுத்து கடைசியாக, பாலாவுடன் 'பரதேசி' என்ற திரைப்படத்தில் பணியாற்றி இருந்தார்.
'வணங்கான்' திரைப்படத்தில், அருண் விஜய் மற்றும் ரோஷ்ணி பிரகாஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
வைரமுத்து ட்விட்டர் பதிவு
பாலா!
— வைரமுத்து (@Vairamuthu) April 10, 2023
தேடி வந்தாய்;
திகைக்குமொரு
கதைசொன்னாய்;
இதிலும் வெல்வாய்
உடம்பில் தினவும்
உள்ளத்தில் கனவும்
உள்ளவனைக்
கைவிடாது கலை
ஐந்து பாட்டிலும்
ஐந்தமிழுக்கு வழிவைத்தாய்
தீராத கங்குகளால்
பழுத்துக்கிடக்கிறது
என் பட்டறை
தோற்காத ஆயுதங்கள்
வடித்துக் கொடுப்பேன்
போய் வா!@IyakkunarBala pic.twitter.com/dLsZQZM6i1