வாழை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
செய்தி முன்னோட்டம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) வெளியான வாழை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் மாரி, அடுத்தடுத்து அசுரன், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் மூலம் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார்.
தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு, அதைத் தொடர்ந்து பின்பற்றி வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ள படம் வாழை.
டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் திலீப் சுப்பராயன் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சிறுவர்கள்
சிறுவர்கள் பார்வையில் கதை சொல்லல்
தனது சிறுவயதில் நடந்த கதையை அடிப்படையாக வைத்து இந்த படத்தை எடுத்த மாரி செல்வராஜ், படத்தை சிறுவர்கள் பார்வையிலேயே கூறியிருப்பது, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீதான சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
திங்க் மியூசிக் யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள், சிறுவர்கள் மற்றும் ஊர் மக்களுடன் மாரி செல்வராஜ் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
படம் முழுவதும் நெல்லை பின்புலத்தில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மாரி செல்வராஜ் எக்ஸ் பதிவு
Unwrapping the emotions of #Vaazhai today!! Here's a few #BTSofVaazhai for you!! ✨
— Mari Selvaraj (@mari_selvaraj) August 23, 2024
➡️➡️https://t.co/OHax4WX5ee#VaazhaifromToday 🎉✨
@Music_Santhosh @ayngaran_offl @navvistudios @disneyplusHSTam@RedGiantMovies_ @thinkmusicindia @Fmpp_Films @thenieswar @KalaiActor… pic.twitter.com/w92qg0Tesi