Page Loader
சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கின் புதிய அப்டேட்
ஜி.வி.பிரகாஷ் - சுதாவுடன் சேர்ந்த எடுத்த புகைப்படம் ட்விட்டரில் பதிவு

சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கின் புதிய அப்டேட்

எழுதியவர் Saranya Shankar
Dec 31, 2022
03:49 pm

செய்தி முன்னோட்டம்

2020 ஆம் ஆண்டு, பெண் இயக்குனரான சுதா கொங்கரா அவரின் இயக்கத்தில் உருவாகி வெளியான அதிரடி திரைப்படம் சூரரைப் போற்று ஆகும். இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இவருடன் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் மற்றும் மோகன் பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனத்தினை உருவாக்கிய கோ.ரா. கோபிநாத் அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்தது. தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் பதிவு

வைரலாகும் ஜி.வி.பிரகாஷின் ட்விட்டர் பதிவு

இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனத்துடன் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கரா அவர்களே ஹிந்தியிலும் இயக்குகிறார். சூர்யாவின் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இதனையடுத்து சமீபத்தில் இவர் இயக்குனர் சுதாவுடன் சேர்ந்த எடுத்த ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "#சூரரைப்போற்று ஹிந்திப் பாடல்கள் பதிவாகி வருகிறது... புதிய பாடல்களுடன் வருகிறது... மிகுந்த உற்சாகம்" என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஜி.வி. பிரகாஷின் ட்விட்டர் பதிவு