சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தலைவர் 170' திரைப்பட அப்டேட்
செய்தி முன்னோட்டம்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி தற்போது பெருமளவில் வசூலினை ஈட்டி வருகிறது 'ஜெயிலர்'.
இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து ரஜினியின் 'தலைவர் 170' திரைப்படத்தினை டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளார், லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில், இப்படத்தின் சில கதாபாத்திரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அதன்படி இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வில்லனாக நடிக்கவுள்ளார் என்றும், இப்படம், பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.
வில்லன்
மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'தலைவர் 170'
மேலும் இப்படத்தில், 'நடிப்பு அரக்கன்' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும், பகத் பாசில் நடிக்கவுள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கிறது.
அதேபோல், இப்படத்தில் 'எங்கேயும் எப்போதும்' படம் மூலம் புகழ்பெற்ற சர்வாணந்த் நடிக்கவுள்ளாராம்.
இவரின் கதாபாத்திரத்தில், முன்னதாக தெலுங்கு நடிகர் நானி நடிக்கவிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இப்படத்திற்கு 'வேட்டையன்' என்று டைட்டில் வைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
நீண்டகாலத்திற்கு பின்னர் ரஜினிகாந்த்-அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பினை தற்போதே ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.