2022-ல் குறைத்து மதிப்பிடப்பட்ட (underrated) தமிழ் திரைப் படங்கள்
செய்தி முன்னோட்டம்
சினிமா என்பது ஒரு ஒருவரின் மனதில் தோன்றும் கற்பனைக்களுக்கு வடிவம் கொடுத்து, தொழில்நுட்பத்தின் மூலம் அதனை காட்சியாக்கி பார்வையாளருக்கு கொடுக்கும் ஒரு கலையாகும்.
இதில் முன்-தயாரிப்பு, படப்பிடிப்பு, தயாரிப்புக்கு பிந்தைய வேலைகள் மற்றும் விநியோகம் என அனைத்தும் அடங்கும்.
நல்ல கதைகளை கருவாக கொண்ட படங்கள் பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டு வெற்றியை அடைக்கிறது.
ஆனால் சில நேரங்களில் வெறும் பலமான கதைகளை மட்டும் நம்பி வெளியாகும் படங்களுக்கு திரையுலகம் பலத்தை சேர்ப்பதில்லை.
இது ரசிகர்களை சென்றுடைய நடிகர்களின் நட்சத்திர பலம், அதனை விளம்பரப்படுத்தும் விதமும் முக்கியமாகிறது.
அதன்படி 2022-ல் நல்ல கதை களத்தை கொண்டும் குறைத்து மதிப்பிடப்பட்ட தமிழ் திரைப்படங்களை பற்றி பின்வருமாறு பாப்போம்.
வரவேற்பை பெறாத படங்கள்
தமிழ் திரையுலகில் குறைத்து மதிப்பிடப்பட்ட படங்கள்
'நரை எழுதும் சுய சரிதம்' டெல்லி கணேஷ் நடித்து வெளிவந்த இப்படம் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற முதியவர் மற்றும் வேலையில்லா இளைஞனுக்கும் இடையிலான நட்பை பற்றி பேசுகிறது. இப்படத்திற்கு IMDb ரேட்டிங் 8.4.
அடுத்தாக சில நேரங்களில் சில மனிதர்கள்' ஒரு சாலை விபத்து, சம்பந்தப்பட்ட 4 கதாபாத்திரங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதே கதை. இப்படத்திற்கு IMDb ரேட்டிங் 8.
அடுத்ததாக மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'கடைசி விவசாயி ' இப்படத்திற்கு IMDb ரேட்டிங் 8.8.
அடுத்தாக சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த 'கார்கி'. இப்படத்தின் IMDb ரேட்டிங் 8.1.
கடைசியாக அருள்நிதி நடித்து வெளிவந்த 'டைரி'. இப்படத்தின் IMDb ரேட்டிங் 7.3.