
ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக மாறிய உலகநாயகன் கமலஹாசன்
செய்தி முன்னோட்டம்
முன்னணி நடிகர் பிரபாஸ் தற்போது முன்னணி இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஓர் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு ப்ராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தினை இந்தியளவில் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கையில், சண்டை காட்சி படமாக்கப்பட்டபொழுது அமிதாப் பச்சனுக்கு எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டது.
வில்லன்
சர்வதேச அளவில் ரிலீஸாகவுள்ள பிரம்மாண்ட திரைப்படம்
இதன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படக்குழுவினர் அண்மையில் ஓர் சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்கள்.
அது என்னவென்றால், இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அதன்படி அவர் பிரபாஸுக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
வெறும் 20 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பிற்கு கமல் சுமார் ரூ.150 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம்.
இப்படம் வரும் ஜனவரி 12ம் தேதி சர்வதேச அளவில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.