Page Loader
விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து திடீரென சென்னை வந்த த்ரிஷா; காரணம் என்ன?
விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து திடீரென சென்னை வந்த த்ரிஷா

விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து திடீரென சென்னை வந்த த்ரிஷா; காரணம் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 19, 2023
05:36 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை த்ரிஷா, தற்போது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளமான அஸர்பைஜானில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அங்கே நடந்து வரும் நேரத்தில், த்ரிஷா மட்டும் சென்னை திரும்பியுள்ளதை பார்த்த ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதா? அல்லது படக்குழு சென்னைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதை என குழம்பி வருகின்றனர். அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. நடிகை த்ரிஷா, 'ஐடென்டிட்டி' என்ற மலையாள திரைப்படத்தில், டோவினோ தாமஸ் உடன் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவே தற்போது சென்னை வந்துள்ளார் திரிஷா. தன்னுடைய பகுதி காட்சிகள் நடித்து முடித்தபின், மீண்டும் ஜனவரி மாதம் விடாமுயற்சி படக்குழுவினருடன் இணைவார் என கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை ஏர்போர்ட்டில் த்ரிஷா