Page Loader
விஜய்யின் லியோ படத்தில் இருந்து திரிஷா விலகினரா? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் கேள்வி
லியோ திரைப்படத்தில் இருந்து திரிஷா விலகல்?

விஜய்யின் லியோ படத்தில் இருந்து திரிஷா விலகினரா? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் கேள்வி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2023
02:43 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த இரு தினங்களாக, இணையத்தில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. அதாவது 'லியோ' படத்திலிருந்து திரிஷா விலகி விட்டார் என்றும், காஷ்மீர் கடும் குளிரால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக, திரிஷா, 'லியோ' படத்தை குறித்து, தான் ரீட்வீட் செய்திருந்த பல பதிவுகளை டெலீட் செய்திருந்தார். இது குறித்து இணையத்தில் செய்திகள் பரவிய நிலையில், இதை திரிஷாவின் தாயார் மறுத்துள்ளார். அதோடு திரிஷாவும், தனது சமூக வலைதள பக்கத்தில், காஷ்மீரின் அழகையும், குளிரையும் தான் ரசிப்பதாக, தற்போது பதிவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்த படம் விஜய்க்கு மட்டுமல்ல, த்ரிஷாவுக்கும் 67-வது படம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ட்விட்டர் அஞ்சல்

லியோ படப்பிடிப்பில் திரிஷா