Page Loader
ஹிந்தி படவுலகில் கால் பதிக்கிறார் திருநங்கை கலைஞர் ஜீவா சுப்ரமணியம்
ஹிந்தி படத்தில் நடிக்கிறார் ஜீவா சுப்ரமணியம்

ஹிந்தி படவுலகில் கால் பதிக்கிறார் திருநங்கை கலைஞர் ஜீவா சுப்ரமணியம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 06, 2023
04:53 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டின் திருநங்கை கலைஞரான ஜீவா சுப்ரமணியம் விரைவில் ஹிந்தி படவுலகில் கால் பதிக்கவிருக்கிறார். பிஜோய் நம்பியார் இயக்கத்தில் தமிழ்-ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகி வரும் புதிய படத்தில், ஜீவா ஒப்பந்தமாகி உள்ளார். 'தர்மதுரை' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜீவா. பின்னர் தர்பார், குலுகுலு போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார். பிரைம் வீடியோவில் வெளியான 'சூழல்' என்ற வெப் சீரிஸ்சிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இது குறித்து செய்தி வெளியிட்ட Times of India பத்திரிக்கையில், "இது ஒரு முக்கியமான பாத்திரம். தாக்கத்தை உருவாக்கும் சில சக்திவாய்ந்த உரையாடல்கள் உள்ளன. எனக்கு இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. நாங்கள் தற்போது ஷெட்யூல் இடைவேளையில் இருக்கிறோம், "என்று ஜீவா பேசியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ஜீவா சுப்ரமணியம்