Loading...
டிரெயின் படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும்! விஜய் சேதுபதி
டிரெயின் திரைப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்

டிரெயின் படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும்! விஜய் சேதுபதி

எழுதியவர் Vasuki
Nov 28, 2026
04:29 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள டிரெயின் திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், யூகி சேது, நரேன் மற்றும் நாசர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ள இப்படத்தில், கபிலன் வரிகளில் ஸ்ருதி ஹாசன் பாடிய 'கன்னக்குழிக்காரா' பாடல் மற்றும் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

அன்பும் மனிதநேயமும் நிறைந்திருக்கும்

டிரெயின் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ஒரே இரவில் ரயிலில் நடைபெறும் மர்மச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஐந்து மணி நேர ரயில் பயணத்திற்குள் பழிவாங்குதல், கோபம், மரணம், அழகான காதல் மற்றும் குழந்தைப் பிறப்பு எனப் பல்வேறு உணர்வுகள் நிறைந்திருக்கும் என்றும், ரயிலை விட வேகமாக நகரும் இப்படத்தின் திரைக்கதை படம் முழுவதும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், மிஷ்கினுக்கே உரித்தான அன்பும் மனிதநேயமும் இப்படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விஜய் சேதுபதி புகழாரம் சூட்டியுள்ளார்.

ADVERTISEMENT