Page Loader
ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு
'வேட்டையன்' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி!

ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2024
01:11 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை, அக்டோபர் 10 உலகெங்கிலும் 'வேட்டையன்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 'ஜெய்பீம்' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 'ஜெயிலர்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் வெளியாகும் ரஜினி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள நேரத்தில் சிறப்பு கட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. அதன்படி, நாளை ஒரு நாள் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது. வழக்கம் போல காலை 9 மணிக்கு முதல் காட்சியை தொடங்கி, இரவு 2 மணி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post