
லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
செய்தி முன்னோட்டம்
அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
அக்டோபர் 19ஆம் தேதி அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், அர்ஜுன், சஞ்சய்தத், திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இத்திரைப்படத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில் இன்று மாலை 6:30 மணிக்கு மூன்றாவது பாடல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
BIG NEWS! TN Govt issues a GO for 5 shows per day for 6 days from October 19th to 24th..
— Ramesh Bala (@rameshlaus) October 11, 2023
Advantage #LEO pic.twitter.com/CYy2I2kmaj