
டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை; ரசிகர்கள் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
டிக்டாக் மூலம் பிரபலமான நடிகர் ரமேஷ், தனது பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்டது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில், தனது நடனத்தின் மூலமாக பிரபலம் ஆனார் ரமேஷ்.
பல திரைப்படங்களில், பின்னணி டான்சராக இருந்தவர் ரமேஷ். ஒரு பிரபல பாடலுக்கு, அவர் எதேச்சையாக நடமாடிய வீடியோ வைரல் ஆனதை அடுத்து, இணையத்தில் பிரபலம் ஆனார்.
இந்த வைரல் விடீயோவின் தொடர்ச்சியாக 'துணிவு' படத்திலும் ஒரு வேடத்தில் நடித்து இருந்தார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று தனது 10-மாடி குடியிருப்பில் இருந்து, குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் ரமேஷ்.
ரமேஷ் தனது பிறந்த நாளன்றே, இறப்பை தேடி சென்ற சோகம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை
Shocked at this 💔
— Surendar Ravichandran 🇮🇳 (@sharewithsurii) January 28, 2023
MHSRIEP 💔#DancerRamesh #Ramesh #Dancer pic.twitter.com/v2DUBW6rxH