
வாழை திரைப்படம் சூப்பர்; மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
செய்தி முன்னோட்டம்
வாழை திரைப்படத்திற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்த வாழை திரைப்படம் வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 23) திரைக்கு வந்தது.
படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்களும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில், விசிக தலைவரும் எம்பியுமான தொல்.திருமாவளவன், மாரி செல்வராஜின் வீட்டிற்கு சென்று அவரை பாராட்டியுள்ளார்.
மேலும், மாரி செல்வராஜின் குடும்பத்தினருடன் பேசிவிட்டு, அவரது வீட்டில் உணவருந்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மாரி செல்வராஜ் எக்ஸ் பதிவு
வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கே நேரில் வந்து வாழ்த்தி இதயத்தை இறுகபற்றிக்கொண்ட அன்பு அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் ♥️♥️♥️♥️💐💐💐💐💐 @thirumaofficial pic.twitter.com/NFnHlBgWAc
— Mari Selvaraj (@mari_selvaraj) August 24, 2024