100 வருடத்தில் இதுதான் முதல் முறை; இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்த வருடம், இந்திய சினிமாவில் பல வெற்றி படங்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக சென்ற வாரம், பல மொழிகளிலும் வெளியான படங்கள் அனைத்தும், வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது.
தமிழில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் நடிப்பில் 'ஜெயிலர்', தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'போலா ஷங்கர்', ஹிந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான 'OMG 2' மற்றும் சன்னி தியோல் நடித்த 'கடார் 2' ஆகிய படங்கள் அமோக வெற்றியடைந்துள்ளது.
இத்திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகள் அனைத்தும் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் மட்டுமே, இந்திய அளவில், இத்திரைப்படங்கள் கூட்டாக ரூ.390 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, மல்டிப்ளெஸ் அஸோஸியேஷன் ஆஃப் இந்தியா, இந்தியா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இந்தியா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை
Cinemas make history as JAILER, GADAR 2, OMG 2 and BHOLA SHANKAR together create sensation at the Box Office.
— Multiplex Association Of India (@MAofIndia) August 14, 2023
Multiplex Association of India (MAI) and Producers Guild of India (Guild) announce record breaking numbers pic.twitter.com/f6ISfJEyX8