Page Loader
காந்தாரா 2-ம் பாகம் வெளிவருகிறது: உறுதி செய்தார் படத்தின் தயாரிப்பாளர்
காந்தாரா -2 வெளிவரும் என தயாரிப்பாளர் உறுதி

காந்தாரா 2-ம் பாகம் வெளிவருகிறது: உறுதி செய்தார் படத்தின் தயாரிப்பாளர்

எழுதியவர் Saranya Shankar
Dec 23, 2022
01:42 pm

செய்தி முன்னோட்டம்

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான காந்தாரா படம் இந்த வருடம் மாபெரும் வெற்றியை பெற்றது. கன்னடத்தில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டது. வெறும் 15 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் காந்தாரா படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என தகவல் வெளியாகி உள்ளது. அவை என்வென்று பின்வருமாறு பாப்போம்.

காந்தாரா 2

காந்தாரா 2-ம் பாகத்தை பற்றி தகவல் தந்துள்ள படத்தின் தயாரிப்பாளர்

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காந்தாரா படத்தின் தயாரிப்பாளரான விஜய் கிரகந்தூர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி பேசியுள்ளார். "காந்தாரா படத்திற்கு கிடைத்த வரவேற்பால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எனவே இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளோம். இப்படத்தின் கதை முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம் அல்லது முதல் பாகத்தின் முந்தைய கதையாகவும் இருக்கலாம்" என்று கூறியுள்ளார். தற்போது ரிஷப் ஷெட்டி சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அவர் வந்த பிறகு இதை பற்றி பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் இந்த படம் உடனடியாக தொடங்க வாய்ப்பில்லை. இன்னும் சில படங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றும் திட்டம் உள்ளது. பிறகு இரண்டாம் பாகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.