Page Loader
GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
தி கோட் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2024
12:50 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள தி கோட் திரைப்படத்தின் முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கியுள்ளது. நடிகர் விஜயின் 68வது படமான தி கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், படத்தின் நான்காவது பாடல் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை வெளியாக உள்ளது. படம், செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான முன்பதிவு ஒருசில தியேட்டர்களில் தொடங்கி உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

கோட் படத்திற்கான முன்பதிவு