
தி கோட்டில் வேற லெவல் குத்தாட்டம்; நடிகை த்ரிஷாவுக்கு நன்றி கூறிய அர்ச்சனா கல்பாத்தி
செய்தி முன்னோட்டம்
தி கோட் படத்தில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் வைபை த்ரிஷா கூட்டியிருந்த நிலையில், அதற்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருந்த லியோ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்த நிலையில், விஜயின் அடுத்த படமாக தி கோட் வந்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்ற தகவல் நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தாலும், அது குறித்து வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் கசிய விடவில்லை.
படத்தின் பாடல்கள் வெளியீட்டின்போது கூட எதுவும் கூறப்படாத நிலையில், அதை சஸ்பென்சாக வைத்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் கொடுத்துள்ளார்.
மட்ட பாடல்
மட்ட பாடலுக்கு நடனம்
யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான படத்தின் முதல் மூன்று பாடல்களும் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை.
எனினும், படத்தோடு பார்க்கும்போது, எந்த வித்தியாசமும் தெரியாத அளவிற்கே இருந்தது.
இதற்கிடையே, நான்காவதாக வெளியான மட்ட பாடல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருந்தது. இந்த பாடலில்தான் த்ரிஷா விஜயுடன் இணைந்து நடனமாடும் காட்சியை இயக்குனர் வைத்துள்ளார்.
மேலும், கில்லி படத்தின் அப்படி போடு பாடலின் சில ஸ்டெப்ஸ்களையும் இதில் இடையே இருவரும் ஆடுவதை ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, தி கோட் படத்தில் நடனமாடியதற்காக நடிகை த்ரிஷாவுக்கு நன்றி தெரிவித்து சமூக ஊடகங்களில் பாடலின் கிளிம்ப்ஸ் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
அர்ச்சனா கல்பாத்தியின் எக்ஸ் பதிவு
A big thank you and loads of love to my dearest @trishtrashers for doing this for us. Love u my Yellow Saree 💛💛 #Matta #GoatGilli #Thalapathy #GOAT pic.twitter.com/rzLVD1yRAt
— Archana Kalpathi (@archanakalpathi) September 7, 2024