
'லால் சலாம்' திரைப்படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியானது
செய்தி முன்னோட்டம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
இத்திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
கிரிக்கெட்டை மையமாக கொண்டுள்ள இத்திரைப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்.கபில்தேவ் நடித்துள்ளார்.
இப்படத்தில் ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்'என்னும் கதாபாத்திரத்தில் சுமார் 20 நிமிடங்களுக்கு வருவார் என்ற தகவலையும் படக்குழு முன்னதாகவே தெரிவித்திருந்தது.
கடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடலை லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், தேர் திருவிழா' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.
இப்பாடல் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
முதல் பாடலின் பதிவு
'THER THIRUVIZHA' from Lal Salaam is here to kickstart the festive vibes! ☀️🌾✨ Let the rural beats ignite the celebration! 🥁🔥✨#TherThiruvizhaOUTNOW ▶️ https://t.co/4BN3YUHM3v
— Lyca Productions (@LycaProductions) December 18, 2023
An @arrahman musical 🎶
Singers 🎤 @Shankar_Live @RaihanahShekar @deepthisings @iamyogi_se… pic.twitter.com/CRNArPqh8s