NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இயக்குனர்-நடிகர் T.ராஜேந்தரின் பிறந்தநாள்: அவரை பற்றி சில சுவாரசிய தகவல்கள்
    இயக்குனர்-நடிகர் T.ராஜேந்தரின் பிறந்தநாள்: அவரை பற்றி சில சுவாரசிய தகவல்கள்
    பொழுதுபோக்கு

    இயக்குனர்-நடிகர் T.ராஜேந்தரின் பிறந்தநாள்: அவரை பற்றி சில சுவாரசிய தகவல்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2023 | 09:01 am 1 நிமிட வாசிப்பு
    இயக்குனர்-நடிகர் T.ராஜேந்தரின் பிறந்தநாள்: அவரை பற்றி சில சுவாரசிய தகவல்கள்
    ஹாப்பி பர்த்டே T.ராஜேந்தர்!! தமிழ் சினிமாவில் தங்கை பாசத்தையும், மருகி மருகி காதலிப்பதையும் கற்று தந்த இயக்குனர் நம்ம டி.ஆர்

    கோலிவுட்டின் 'அஷ்டாவதானி' என புகழப்படுபவர் T.ராஜேந்தர். T.R என்று சுருக்கமாக அழைக்கப்படும் T.ராஜேந்தர், பல கலைகளை. தன் சுய முயற்சியால் கற்று தேர்ந்தவர். யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, திரைப்பட இயக்கம், இசை, நடிப்பு என பல துறைகளிலும் முன்னோடியாக திகழ்பவர் TR . அவரின் 69-வது பிறந்தநாளான இன்று அவரை பற்றி சில சுவாரசிய தகவல்களை காண்போம். இவரின் முதல் படமான 'ஒரு தலை ராகம்' படத்தின் கதை மட்டும் தான் இவருடையது. அதை இயக்கியது இப்ராஹிம் என்பவர். அந்த படத்தில் சிறிய வேடத்திலும் நடித்துள்ளார். அதோடு, படத்தின் பாடல்களை எழுதியதும், மெட்டமைத்ததும் T.R தான். முற்றிலும் புது முகங்களை வைத்து, தான் படித்த கல்லூரியிலே இந்த படத்தை படமாக்க வைத்தார் T.R.

    குடும்ப கதைகளில் வெற்றி கண்ட இயக்குனர் ராஜேந்தர் 

    இவர் அறிமுகம் செய்த நடிகைகள் அனைவரும் தற்போது வரை சினிமாவில் பிரபலமாகி உள்ளனர். அமலா, நளினி தொடங்கி மும்தாஜ் வரை இவரின் அறிமுகங்கள் தான். தலை நிறைய முடி, தாடி என ஹீரோவின் எந்த அம்சமும் இல்லாமல், வெற்றி பெற்ற நடிகர் ராஜேந்தர். பாடல்களுக்கென பிரத்யேகமாக, காஸ்ட்லியான செட் அமைக்கும் ட்ரெண்டை துவக்கியவரும் இவரே. அதோடு, அடுக்கு மொழி மூலம், பஞ்ச் வசனங்கள் பேசும் ட்ரெண்டை உருவாக்கியதும் இவர் தான். இவர்தமிழின் மீது கொண்ட ஈடுபாட்டால், தனது பிள்ளைகளுக்கு, சிலம்பரசன், குறளரசன், இலக்கியா என தமிழ் பெயர்களையே சூட்டினார். தன்னுடைய மகனை (சிம்பு), சிறு குழந்தையாக இருக்கும் போதே ஹீரோவாக அறிமுகம் செய்தது மட்டுமின்றி, அந்த படத்தை வெற்றி அடைய வைத்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பிறந்தநாள்
    கோலிவுட்

    பிறந்தநாள்

    நடிகை சாய்பல்லவியின் பிறந்தநாள்: அவரின் நடிப்பில் வெளியான, வெளியாகப்போகும் படங்களின் பட்டியல் கோலிவுட்
    இன்று 'குந்தவை' திரிஷாவிற்கு பிறந்தநாள்: அவரின் நடிப்பில் வெளியான சில அற்புதமான கதாபாத்திரங்கள்  த்ரிஷா
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்  திருவண்ணாமலை
    அஜித் பிறந்தநாள்: அன்று 'ராசியற்ற நடிகர்', இன்று 'தல' ஆனதன் ரகசியம்! நடிகர் அஜித்

    கோலிவுட்

    ரஜினிகாந்த் முதல் சமந்தா ரூத் பிரபு, படம் நஷ்டமடைந்தவுடன் சம்பளத்தை திருப்பி அளித்த நட்சத்திரங்கள் தமிழ் திரைப்படங்கள்
    உழைச்சது எல்லாம் வீணாப்போச்சு! லைவ் வீடியோ கண்ணீர்விட்டு அழுத நடிகை சதா வைரலான ட்வீட்
    விஜய்யின் 68 வது பட அப்டேட் - மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கிறாரா? கொந்தளிக்கும் ரசிகர்கள் நடிகர் விஜய்
    வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' ட்ரைலர் வெளியானது  திரைப்பட அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023