நெட்ஃபிலிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளிவர இருக்கும் 'தட் '90s ஷோ'
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'தட் 90ஸ் ஷோ' தொடர் ஜனவரி 19 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்படுகிறது. இது நெட்ஃபிலிக்ஸ் ஒடிடி தளத்தில் தொடராக வெளிவர இருக்கிறது. 'தட் '90s ஷோ' என்பது 1995-ஆம் ஆண்டு கோடைக்காலத்தை அடிப்படையாக கொண்ட தொடராகும். இதன் முன்னோடி தொடரான 'தட் 70ஸ் ஷோவில் அறிமுகமான கதாப்பாத்திரங்களையும் கொண்டு இது தொடரப்போகிறது. பொதுவாக இந்த வகையான நகைச்சுவை தொடர்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது. இது போன்ற தொடர்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்கப்படுகின்றன. உதாரணமாக F.R.I.E.N.D.S, The Big Bang Theory, The Office போன்ற சிட்காம் தொடர்கள் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளன. இவை மீம்ஸ்களாகவும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகின்றன.
10 எபிசோட்களுடன் வெளிவர இருக்கும் 'தட் 90ஸ் ஷோ'
எரிக் ஃபோர்மன் மற்றும் டோனா பின்சியோட்டியின் டீனேஜ் மகளான லியா ஃபோர்மனை மையமாகக் கொண்டது இந்த தொடராகும். 1995 ஆம் ஆண்டு கோடை கால விடுமுறையை கழிப்பதற்காக லியா ஃபோர்மன் தனது தாத்தா பாட்டியின் வீட்டிற்கு வருகிறார். அங்கு அவளுக்கு கிடைக்கும் அனுபவம் மற்றும் அவள் நண்பர்களுடன் ஏற்படும் பிணைப்பை பின்னணியாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. 20 வருடத்துக்கு பிறகு நடக்கும் 'தட் 70ஸ் ஷோ' நிகழ்வுகளின் தொடர்ச்சியே இந்த தொடராகும். பழைய நடிகர்கள் மற்றும் புதிய நடிகர்களின் என இந்த தொடரை பார்க்க ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இந்தத் தொடர் ஜனவரி 19 அன்று 10 எபிசோட்களுடன் திரையிடப்படும்.