
தளபதி 68: விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா; முக்கிய வேடத்தில் பிரஷாந்த்?
செய்தி முன்னோட்டம்
விஜய் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படம் வெளியாகும் முன்னரே, விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், AGS என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் 'தளபதி 68' படத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
ஆனால், அந்த படம் குறித்து எந்த அப்டேட்டும் தற்போது வெளியிட போவதில்லை என வெங்கட்பிரபு தெரிவித்த நிலையில், சென்ற மாதம், விஜய், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் மற்றும் வெங்கட் பிரபு, மூவரும் அமெரிக்கா சென்றனர்.
தொடர்ந்து, 3D ஸ்கேன் தொழில்நுட்பத்தில், நடிகர் விஜய் ஸ்கேன் செய்யப்படுவது போன்ற போட்டோ ஒன்றையும் வெங்கட் பிரபு பகிர்ந்திருந்தார்.
card 2
விஜய் உடன் முதல்முறையாக இணையும் பிரஷாந்த்?
இதனை தொடர்ந்து, தற்போது இந்த திரைப்படத்தை குறித்து யூக அடிப்படையில் பல செய்திகள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அதன்படி, 3D ஸ்கேன் தொழில்நுட்பம் மூலமாக, இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் விஜய் என கூறப்படுகிறது.
அதோடு, சிம்ரன், ஜோதிகா ஆகியோரை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது எனவும் கூறப்பட்டது.
தற்போது, இப்படத்தில் முக்கிய வேடத்தில் பிரபுதேவாவும், பிரஷாந்தும் நடிக்க போவதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
'போக்கிரி' படத்தில், பிரபுதேவாவுடன் நடனமாடிய விஜய், அவர் இயக்கத்தில் வில்லு திரைப்படத்தில் நடித்தார். அதேபோல, ஹிந்தியில் பிரபுதேவா இயக்கிய படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடினார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, 90'களின் காலகட்டத்தில், விஜய்-அஜித்-பிரஷாந்த் என மூவரும் டாப் ஹீரோக்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.