Page Loader

"இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்

எழுதியவர் Srinath r
Dec 20, 2023
10:48 am

செய்தி முன்னோட்டம்

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது 69வது படத்திற்காக இணைந்துள்ளார். தளபதி69 என்று அழைக்கப்படும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிலையில், அடுத்ததாக இலங்கையிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் உடன், ஜெயராம், சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் அண்மையில், கிச்சா சுதீப் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோரும் படத்தில் இணைந்தனர். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை, டிசம்பர் 31ஆம் தேதி படக்குழு வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது.

2nd card

"இது நிச்சயமாக பாஸ் அல்லது புதிர் அல்ல" 

மேலும் படத்துக்கு, 'பாஸ்' என தலைப்பிட்டு இருப்பதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள படத்தின் தயாரிப்பாளர், அர்ச்சனா கல்பாத்தி, நிதானமாக உண்மையான தலைப்பிற்கு காத்திருக்கும் படி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "எல்லா அப்டேட்டுகளையும் பார்த்தேன். அன்புக்கு நன்றி ❤️ நிதானமாக இருங்கள் மற்றும் தலைப்பை விரைவில் எதிர்பார்க்கவும். வெங்கட் பிரபு ஏதோ விசேஷமாக செய்து வருகிறார். இது நிச்சயமாக 'பாஸ்' அல்லது 'புதிர்' அல்ல 😊 அனைவருக்கும் காலை வணக்கம்" என பதிவிட்டுள்ளார். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தில், விஜய் பல வேடங்களில் நடிப்பதாகவும், 19 வயது இளைஞனாக நடித்திருப்பதாகவும், அந்த காட்சிகளுக்காக பட குழுவினர் ₹6 கோடி செலவழித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ள ட்விட்