Page Loader
'The G.O.A.T': வெளியானது நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 

'The G.O.A.T': வெளியானது நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 

எழுதியவர் Sindhuja SM
Dec 31, 2023
06:16 pm

செய்தி முன்னோட்டம்

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின், நடிகர் விஜய் தனது 68வது திரைப்படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், பிரசாந்த், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் இளமையான மற்றும் வயதான விஜய்யின் படம் காட்டப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் 'ஸ்கை டைவிங் பாராச்சூட்' ஒன்று விழுந்து கிடப்பது போலவும் தெரிகிறது. விஜய்யின் இரண்டு முகங்கள் இந்த போஸ்டரில் காட்டப்பட்டுள்ளதால் இது டபுள் ஆக்ட்டிங்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அந்த போஸ்டரில் நடிகர் விஜய்யை, "The Greatest Of All Time"(The G.O.A.T) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

'தளபதி 68' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்