நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் நிறுத்தம் - அதிரடி காட்டிய மாவட்ட கலெக்டர்!
செய்தி முன்னோட்டம்
கோலிவுட் சினிமாவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.
ஆனால், தற்போது தென்காசியில் நடைபெறும் படப்பிடிப்பை நிறுத்த, அம்மாவட்டத்தின் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கு காரணம், அந்த படத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு காட்சிகளுக்கு, படக்குழுவினர்கள் வனத்துறையினரிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்றும், திடீர் சத்தத்தால், சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்றும், அதனால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்தரன் உத்தரவிட்டுள்ளார்.
வரலாற்று பாணியில் உருவாகும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN | கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்த ஆட்சியர் உத்தரவு#CaptainMiller | #MovieShooting | #Dhanush pic.twitter.com/HZ5ansFrbP
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 25, 2023