Page Loader
ஹாப்பி பர்த்டே விஜய் சேதுபதி: மிஸ்க்கின் இயக்கும் ட்ரெயின் படத்தின் டீஸர் வெளியீடு

ஹாப்பி பர்த்டே விஜய் சேதுபதி: மிஸ்க்கின் இயக்கும் ட்ரெயின் படத்தின் டீஸர் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2025
12:40 pm

செய்தி முன்னோட்டம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்காக கலைப்புலி தாணு இயக்கத்தில், மிஷ்கின் இயக்கி வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ட்ரெயின் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். மார்ச் 2023 இன் பிற்பகுதியில், மிஷ்கின் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி முன்னணி நடிகராக நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 இல் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். அதோடு, மே மாத இறுதியில், மாவீரன் படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளார். அப்படத்தின் ப்ரோமோஷனின் போது, இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மிஷ்கின் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாகவே ட்ரெயின் படம் துவங்கியது.

விவரங்கள்

ட்ரெயின் படத்தை பற்றிய சில விவரங்கள்

இப்படத்தில் விஜய் சேதுபதி தவிர நடிகர் ஜெயராம் முக்கிய வில்லன் வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 நவம்பர் நவம்பர் மாதத்தில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கி, கடந்த அக்டோபர் படப்பிடிப்பு நிறைவுற்றது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொழில்துறைக்கு திரும்பும் வகையில், ஃபௌசியா பாத்திமா ஒளிப்பதிவை கையாள்கிறார். இப்படத்தில் மேலும், நரேன், சம்பத் ராஜ், KS ரவிக்குமார், கனிகா என பலர் நடித்துள்ளனர். தற்போது வெளியான டீஸர் வீடியோவில் படம் ஒரு ட்ரைனில் நடப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. அதோடு, இப்படத்திற்காக விஜய் சேதுபதி டப்பிங்கின் போது மேற்கொண்ட சிரத்தைகள் பற்றியும் காட்டப்பட்டுள்ளது.