NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல்
    பொழுதுபோக்கு

    இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல்

    இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல்
    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 02, 2023, 10:53 am 1 நிமிட வாசிப்பு
    இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல்
    நாளை (பிப்.3) வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்

    இந்த வார இறுதியில், அதாவது நாளை, (பிப்ரவரி 3 ), 7 தமிழ் திரைப்படங்கள் வெளிவர உள்ளன. அவற்றின் பட்டியல் இங்கே: ரன் பேபி ரன்: RJ பாலாஜி நடிப்பில் வெளியாகும் இந்த படத்தில், அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஈஷா தல்வார், ராதிகா, ஹரிஷ் ப்ரெடி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். மைகேல்: சந்தீப் கிஷன் நடித்துள்ள இந்த படம், 90 களின் காலகட்டத்தில் நடைபெறும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை வழங்குகிறார். விஜய்சேதுபதி, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தி கிரேட் இந்தியன் கிச்சன்: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படம், இதே பெயரில் மலையாளத்தில் வெளியான வெற்றி படத்தின் ரீமேக் ஆகும்.

    சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகும் 2 படங்கள்

    நான் கடவுள் இல்லை: இயக்குனர் SA .சந்திரசேகர் நீண்ட நாள் கழித்து இயக்கி இருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ரோகினி, சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். தலைக்கூத்தல்: சமுத்திரக்கனி, கதிர் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். பொம்மை நாயகி: பா. ரஞ்சித் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் ஷான் இயக்கி உள்ளார். குற்றப்பின்னணி: 'ராட்சசன்' படத்தில் கிறிஸ்டோபர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சரவணன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் தீபாளி, சிவா, லால் மற்றும் பலர் நடித்துள்ளனர். அவற்றுடன், செம்பி மற்றும் பிளாக் பாந்தர்: வக்காண்டா பார்எவர் ஆகிய படங்கள் இந்த வாரத்திலிருந்து OTT -இல் திரையிடப்படும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கோலிவுட்
    திரைப்பட வெளியீடு

    சமீபத்திய

    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு இந்தியா
    ஐபிஎல் 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித் சர்மா சொன்னது இது தான் ஐபிஎல் 2023
    ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி துவங்குகிறாரா? என்ன செய்ய போகிறார்? ஓ.பன்னீர் செல்வம்
    "Idhu namma all'u!" : வலுவான ஆல்ரவுண்டர் காம்போவை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்

    கோலிவுட்

    கவிஞர் வாலியை இழந்து வாடும் கவிஞர் வைரமுத்து; வைரலாகும் ட்விட்டர் பதிவு வைரலான ட்வீட்
    மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார் வைரல் செய்தி
    நவீன 'முதல் மரியாதை'; 38 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில்! திரைப்பட வெளியீடு
    ஹீரோயினாக களமிறங்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் பொழுதுபோக்கு

    திரைப்பட வெளியீடு

    'பத்து தல' படத்தின் வெற்றிக்கு பாண்டிச்சேரி ரசிகர்கள் செய்த காரியம் திரைப்பட அறிவிப்பு
    நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு கோலிவுட்
    'பத்து தல' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் ஆர்யாவும், சாயிஷாவும் திரைப்பட அறிவிப்பு
    இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக போகும் படங்களின் பட்டியல் தமிழ் திரைப்படம்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023