இந்த வாரம் தமிழ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! ஓடிடி மற்றும் தியேட்டர்களில் வெளியாகும் டாப் திரைப்படங்கள்!
செய்தி முன்னோட்டம்
வார இறுதி நாட்களைக் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ கழிப்பதற்குக் பொழுதுபோக்கு அம்சங்களைத் தேடும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் நேரடியாகவும், தமிழாக்கம் செய்யப்பட்டும் வெளியாகும் முக்கியத் திரைப்படங்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. ஜூன் 15-21, 2026 வரையிலான இந்த வாரத்தில், விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர், யோகி பாபுவின் அரசியல் நகைச்சுவை முதல் சமந்தாவின் அதிரடி ஆக்ஷன் அவதாரம் வரை பல சுவாரசியமான படைப்புகள் தமிழ் ரசிகர்களின் பார்வைக்கு வருகின்றன. அவை பின்வருமாறு:-
த்ரிஷ்யம் 3
த்ரிஷ்யம் 3 - ஜூன் 18 (அமேசான் பிரைம் வீடியோ - தமிழ் டப்பிங்)
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் சித்திக் ஆகியோர் நடிப்பில் வெளியாகிப் பெரும் வசூல் சாதனை படைத்த த்ரிஷ்யம் 3 திரைப்படம், ஜூன் 18 முதல் அமேசான் பிரைமில் அதிகாரப்பூர்வத் தமிழ் டப்பிங்குடன் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. தனது குடும்பத்தைக் காக்க ஜார்ஜ்குட்டி நடத்தும் இறுதிப் புத்திசாலித்தனமான ஆட்டமும், காவல்துறையின் அடுத்தகட்ட நகர்வுகளுமே இந்த க்ரைம் த்ரில்லரின் கதையாகும்.
கெணத்த காணோம்
கெணத்த காணோம் - ஜூன் 16 (ஜியோ ஹாட்ஸ்டார் - நேரடித் தமிழ்ப் படம்)
யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள நேரடித் தமிழ்த் திரைப்படம் இதுவாகும். வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் திடீரென காணாமல் போகும் ஒரு பழங்காலக் கிணற்றைத் தேடும் கிராம மக்களின் கதையை, உள்ளூர் அரசியல் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை பின்னணியுடன் நையாண்டியாக இப்படம் விவரிக்கிறது.
அதிரடி
அதிரடி - ஜூன் 19 (சோனி லைவ் - தமிழ் டப்பிங்)
டொவினோ தாமஸ், பேசில் ஜோசப் மற்றும் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள மலையாள ஆக்ஷன்-காமெடி திரைப்படம் அதிரடி என்ற பெயரிலேயே தமிழிலும் வெளியாகிறது. கல்லூரியில் தடை செய்யப்பட்ட திருவிழாவை மீண்டும் நடத்த முயற்சிக்கும் சாம்குட்டி என்ற மாணவனுக்கும், உள்ளூர் அரசியல்வாதிக்கும் இடையே ஏற்படும் மோதலும், அதன் தொடர்ச்சியான நீதிமன்றச் சிக்கல்களும் கதையாகக் களம் இறங்கியுள்ளது.
சேவ் தி டைகர்ஸ் சீசன் 3
சேவ் தி டைகர்ஸ் சீசன் 3 - ஜூன் 19 (ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழ் டப்பிங்)
ஏற்கனவே இரண்டு சீசன்கள் வெளியாகித் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற தெலுங்கு நகைச்சுவைத் தொடரின் மூன்றாவது சீசன் தற்பொழுது தமிழிலும் வெளியாகிறது. திருமண வாழ்க்கையில் விரக்தியடைந்த மூன்று கணவர்களின் கற்பனை உலக வாழ்க்கையும், அதனால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களும் இதில் நகைச்சுவையாகக் காட்டப்பட்டுள்ளன.
இந்த வார தியேட்டர் வெளியீடுகள்
மா இண்டி பங்காரம் & தீவானா
பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா ரூத் பிரபு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள அதிரடித் திரைப்படமாகும். தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரிலும் தெலுங்கில் மா இண்டி பங்காரம் என்ற பெயரிலும் வெளியாகிறது. தீவானா என்பது ஸ்ரீகாந்த் சங்கிரெட்டி இயக்கத்தில் ஹர்ஷித் ரெட்டி மற்றும் சினேகா மணிமேகலை நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியாகும் காதல் திரைப்படமாகும். காதலில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான சிக்கல்கள், தவறான புரிதல்கள் மற்றும் பிரிவுகளை இரண்டு நபர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.