2026 பொங்கல் ரிலீஸ்: திரையரங்குகளில் வெளியாகவுள்ள தமிழ்த் திரைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில், வரும் ஜனவரி 15-ஆம் தேதி திரையரங்குகளில் பல்வேறு நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, நீண்ட நாட்களாகக் காத்திருந்த திரைப்படங்களும் இந்த பொங்கல் ரேசில் இணைந்துள்ளன. நடிகர் கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிறது. இதில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். அதேபோல், நடிகர் ஜீவா நடிப்பில் நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' என்ற ஆக்ஷன்-காமெடி திரைப்படம் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் பொங்கலன்று திரைக்கு வருகிறது.
மற்ற படங்கள்
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படமும் வெளியாகிறது
நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்' திரைப்படம், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொங்கலுக்கு வெளியாகிறது. மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள சர்ச்சைக்குரிய மற்றும் பிரம்மாண்டமான 'திரௌபதி 2' திரைப்படமும் ஜனவரி 15-ல் ரிலீஸாகிறது. மேலும், அம்மு அபிராமி நடிப்பில் கிடா சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'ஜாக்கி' திரைப்படமும் அன்றைய தினமே வெளியாகிறது. இந்த ஆண்டு பொங்கல் போட்டியில் கார்த்தி, ஜீவா, சந்தானம் எனப் பல முன்னணி நடிகர்களின் படங்கள் மோதுவதால், திரையரங்குகள் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறை தினங்களை முன்னிட்டுப் படங்களுக்கான முன்பதிவுகளும் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன.