விரைவில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புதிய ஓடிடி தளம்: தமிழக அரசு ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
திரையரங்குகளுக்கு அடுத்தபடியாகத் திரைப்படத் தயாரிப்பாளர்களின் முக்கிய வாழ்வாதார முதலீடாக டிஜிட்டல் தளங்கள் உருவெடுத்துள்ளன. இந்நிலையில், ஓடிடி வெளியீட்டு விதிமுறைகள் மற்றும் வியாபாரத்தில் நிலவும் பல்வேறு சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (TFPC) சார்பில் புதிய சொந்த ஓடிடி தளம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழ் சினிமாத் துறையினரின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த இத்திட்டம் தற்பொழுது இறுதிக்கட்ட உள்கட்டமைப்புப் பணிகளை எட்டியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த புதிய டிஜிட்டல் ஓடிடி தளத்தைக் கூடிய விரைவில் முதலமைச்சர்விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளதாகத் நம்பத்தகுந்த கோட்டை வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோரிக்கை
முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க ஏற்பாடு
சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, சினிமா தயாரிப்புத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பாகத் தொடங்கப்படவுள்ள இந்த ஓடிடி தளத்திற்கு அரசின் முழுமையான ஆதரவை அவர்கள் கோரியிருந்தனர். அதற்கு விஜய்யும், இக்கோரிக்கையை மிகவும் சாதகமாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்திருந்தார். அதன்படி, தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த புதிய டிஜிட்டல் ஓடிடி தளத்தைக் கூடிய விரைவில் முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளதாகத் நம்பத்தகுந்த கோட்டை வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்பார்ப்பு
சிறு பட்ஜெட் படங்களுக்குப் புதிய வாழ்வாதாரம்
தற்போதுள்ள முன்னணி பன்னாட்டு ஓடிடி நிறுவனங்கள் பெரிய நக்ஷத்திரங்களின் திரைப்படங்களை வாங்குவதற்கே முன்னுரிமை அளித்து வருகின்றன. இதனால், பல கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்படும் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்கள் திரையரங்கு ரிலீஸுக்கு பின் ஓடிடி வியாபாரம் ஆகாமல் முடங்கும் சூழல் நிலவுகிறது. தயாரிப்பாளர் சங்கமே நேரடியாகத் தொடங்கும் இந்த புதிய ஓடிடி தளம் மூலம், அனைத்துத் தயாரிப்பாளர்களும் தங்களது படங்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக டிஜிட்டல் முறையில் வெளியிட்டு முதலீட்டைத் துரிதமாக மீட்டெடுக்க வழிவகை ஏற்படும். இந்த புதிய தளம் குறித்த தொழில்நுட்ப விபரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வப் பெயர் உள்ளிட்ட அடுத்தகட்ட அறிவிப்புகளைத் தயாரிப்பாளர் சங்கம் இன்னும் சில தினங்களில் முறைப்படி வெளியிடத் திட்டமிட்டுள்ளது.