தமிழ் சினிமாவில் நடனத்தில் கலக்கும் நடிகர்கள் சிலர்!
இன்று (ஏப்ரல் 29) உலக நடன தினம். இந்த நாளில், தமிழ் சினிமாவில், நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் மக்கள் மனதில் இடம்பிடித்த சில நடிகர்கள் பட்டியல் இதோ: கமல்ஹாசன்: நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் அபாரமாக ஸ்கோர் செய்யும் கமல்ஹாசன் இன்றி, எந்த பட்டியலும் துவங்காது. அவர் சினிமாவை தேர்வு செய்தவுடன், முறைப்படி நடனம் கற்றுக்கொண்டார். அதோடு, ஹீரோவாக அறிமுகம் ஆகுமுன்னர், உதவி நடன அமைப்பாளராகவும் இருந்துள்ளார். விஜய்: விஜய் படங்கள் என்றாலே, அதில் தவறாமல் இருக்கும் 4 அம்சங்களில் ஒன்று, நடனம். எந்த கடின ஸ்டெப்பாக இருந்தாலும், இலகுவாக அவர் ஆடும் பாணியை, பல டான்ஸ் மாஸ்டர்கள் புகழ்ந்துள்ளனர். அவரது படம் வெற்றி அடையாவிட்டாலும், அவர் ஆடிய பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனது.
நடன அமைப்பாளராக துவங்கி ஹீரோவாக மாறிய பிரபுதேவா
பிரபுதேவா: நடனம் என்றாலே அதற்கு வேறு பெயர் பிரபுதேவா என்பது போல, இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழ் பெற்ற பிரபுதேவா, இன்றும் ரப்பர் போல வளைந்து ஆடுவது வியக்கவைக்கிறது சிம்பு: சிறு வயதிலேயே, துறுதுறு நடிப்பாலும், துடிப்பான நடந்தாலும் அனைவரையும் கவர்ந்தவர் சிம்பு. உடல் எடை கூடியபோது கூட, நடனத்தில் சோடை போகவில்லை சிம்பு. ஓவ்வொரு பாடலும் பெயர் அடைய வேண்டும் என சிரமேற்கொண்டு அவர் பல கடினமான நடனசைவுகளை தேர்வு செய்கிறார். தனுஷ்: 'மன்மத ராசா' பாடலில் புழுதி பறக்க இவர் ஆடியதை, அவர் குடும்பத்தாரால் கூட நம்ப முடியவில்லை. கமல்ஹாசனை போல, நடிப்பிலும், நடனத்திலும் கலக்குபவர் தனுஷ். சிவகார்த்திகேயன்: காமெடி போலவே, நடனமும் இவரின் பிளஸ் பாயிண்ட்