Page Loader
சூர்யாவின் கங்குவா திரைப்படம் - க்ளிம்ப்ஸ் வீடியோ குறித்த அப்டேட் 
சூர்யாவின் கங்குவா திரைப்படம் - க்ளிம்ப்ஸ் வீடியோ குறித்த அப்டேட்

சூர்யாவின் கங்குவா திரைப்படம் - க்ளிம்ப்ஸ் வீடியோ குறித்த அப்டேட் 

எழுதியவர் Nivetha P
Jul 20, 2023
12:44 pm

செய்தி முன்னோட்டம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நாயகி திஷா பதானி ஜோடியாக நடித்து வரும் படம் தான் 'கங்குவா'. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் மும்முரமாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூ.80 கோடி கொடுத்து வாங்கியுள்ளது என்று படக்குழு தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளது. பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் அண்மையில் வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளான வரும் ஜூலை 23ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமான தகவலினை இணையத்தில் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ