நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வேடத்தில் நடிக்க போகிறாரா சூர்யா?
செய்தி முன்னோட்டம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்புலகின் சக்ரவர்த்தி. கோலிவுட் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே வியந்து பார்த்த நடிகர் அவர் என்பதில் ஐயமில்லை.
அவர் நடித்த கதாபாத்திரங்கள் பலவும் இன்றளவும் பேசப்படுகிறது. குறிப்பாக சரித்திர படங்களில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள், அந்த வரலாற்று நாயகர்களை நம் கண் முன்னே நிறுத்தும்.
அப்படி 1964ல், சிவாஜி கணேசன் நடிப்பில், பெரும் வெற்றி பெற்று, மீண்டும் டிஜிட்டல் வெர்ஷனில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம் தான், கர்ணன்.
அந்த படத்தில், 'கர்ணன்' கதாபாத்திரத்தில் உயிரோட்டத்துடன் நடித்திருப்பார் சிவாஜி.
மஹாராபாரதத்தில் வரும் ஒரு துணை கதாபாத்திரமான கர்ணனை, கதையின் நாயகனாக உருவகப்படுத்தி, திரைக்கதை நகரும்.
card 2
கர்ணன் வேடத்தில் சூர்யா
தற்போது, நடிகர் சூர்யாவும், அதே கர்ணன் வேடத்தில் நடிக்க போவதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கங்குவா படத்தின் ஷூட்டிங்கில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் சூர்யா, அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட 'வாடிவாசல்' படத்தில் நடிப்பதாக இருந்ததாம்.
ஆனால், வெற்றிமாறன், 'விடுதலை-2' ஷூட்டிங் வேலையில் இருப்பதால், இப்போதைக்கு 'வாடிவாசல்' துவங்கப்படாது எனவும் கூறப்படுகிறது.
அதனால், சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் நடித்து விட்டு, அதன் பின்னர், பாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆக போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கப்போகிறார் எனவும் கூறப்படுகிறது.
மஹாபாரதத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில், கர்ணன் வேடத்தில் சூர்யா நடிக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.