சூர்யாவின் கங்குவா ட்ரைலரில் கார்த்தியை கண்டுகொண்ட ரசிகர்கள்!
இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 12ஆம் தேதி சூர்யா மற்றும் பாபி தியோல் நடித்துள்ள 'கங்குவா' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இந்த ட்ரைலரில் பல ரணகள விஷயங்கள் இருந்தபோதும், இந்த ட்ரைலரின் முடிவில், சூர்யாவின் ரசிகர்கள் டிரெய்லரின் முடிவில், அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தியின் கிலிம்ப்ஸ் வெளியானதாக கூறுகிறார்கள். இரண்டு நிமிட 37 வினாடிகள் நீளமான டிரெய்லரின் முடிவில், ஒரு பழங்குடியின மனிதன் குதிரையின் மீது அமர்ந்து சூர்யாவை நெருங்கி வருவதைக் காணமுடிந்தது. அவரைப் பார்த்ததும், சூர்யா சிரிப்பது போல காட்சி இருந்தது. அந்த நாயகன் கார்த்திதான் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
Twitter Post
Twitter Post
Twitter Post
இரண்டாம் பாகம் வெளியாகும் என இயக்குனர் உறுதி
படத்தில் கார்த்தி நடித்துள்ளார் என்பதை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் உறுதி செய்தார். மேலும் அவர் கார்த்தியின் ரோல் சிறியதாக இருந்தாலும், அடுத்த பாகத்திற்கான பாலமாக இருக்கும் என கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என்பதை இயக்குனர் சிவா மற்றும் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். பல மொழிகளில் வெளியாகும் இந்த படம், சரித்திர காலத்தில் நடைபெறும் ஒரு கதைக்களமும், நிகழ்காலத்தில் நடைபெறும் கதைக்களமும் இருக்கிறது. இதில் நிகழ்கால கதைக்களத்தில் தான் சூர்யாவிற்கு திஷா பதானி ஜோடியாக நடிக்கிறார். அதனால் இன்றைய ட்ரைலரில் அவர்களின் காட்சிகள் இடம்பெறவில்லை.