தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்!
செய்தி முன்னோட்டம்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ் (IIHB ), சமீபத்தில் வெளியிட்ட தென்னிந்தியாவின் பிரபலமான மனிதர்கள் பட்டியலில், முதலிடத்தில் நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களையும் இணைத்து, 2022-இல் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில், கிட்டத்தட்ட 6000 நபர்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.
தென்னிந்திய நடிகர்களான விஜய், அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா, பகத் பாசில் போன்றோரும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நம்பகத்தன்மை, அடையாளம், கவர்ச்சி, மரியாதை, பிரபலம் (TIARA ) போன்ற 64 அம்சங்களின் அடிப்படையில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
தென்னிந்திய சினிமா துறையில் உள்ள நடிகர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தமிழ் நடிகர்கள் பட்டியலில், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன், 'நம்பகத்தன்மை' அடிப்படையில் முன்னணியில் உள்ளனர்.
அஜித், விஜய்
தமிழில் பிரபலமான நடிகராக விஜய்யும், மரியாதை மிகுந்த நடிகராக அஜித்தும் தேர்வு
தெலுங்கு சினிமாவில் நம்பிக்கையான நட்சத்திரங்களாக அல்லு அர்ஜுனும், விஜய் தேவரகொண்டாவும் முன்னணி வகிக்கின்றனர்.
மலையாளத்தில், பகத் பாசிலும், கன்னடத்தில், கிச்சா சுதீப்பும் முதலிடத்தில் உள்ளனர்.
பிரபலமான நபர்களாக, தமிழில், விஜயும், விஜய் சேதுபதியும், தெலுங்கில், பிரபாஸும், ராம் சரணும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் மரியாதை மிகுந்த நடிகர்களாக அஜித்தும், சிவா கார்த்திகேயனும் தேர்வாகி உள்ளனர்.
'பிரபலம்' அடிப்படையில், தமிழில் விஜயும், தெலுங்கில் பிரபாஸும், மலையாளத்தில் துல்கர் சல்மானும் தேர்வாகி உள்ளனர்.
இந்த அம்சங்கள் அனைத்திலும், நடிகர் சூர்யா முன்னணியில் உள்ளார். தமிழ் திரையுலகில் குறிப்பாக, சூர்யாவிற்கு அடுத்த இடத்தில நடிகர் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய அளவில் பிரபலமான நடிகர் பட்டியலில், முதல் இடத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.