சூர்யா-திரிஷா கூட்டணியில் வீரபத்ருடு! தெலுங்கு ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு.. கருப்பு சட்டை, கையில் அரிவாளுடன் மிரட்டும் சூர்யா
செய்தி முன்னோட்டம்
நடிகர் சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்தின் தெலுங்கு டைட்டில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் இந்தப் படத்திற்கு வீரபத்ருடு எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இதற்கான ஒரு மாஸான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டரில் சூர்யா கருப்புச் சட்டை, கருப்பு வேட்டி மற்றும் நெற்றியில் சிவப்புத் திலகத்துடன், கையில் ஒரு பெரிய அரிவாளைப் பிடித்துக் கொண்டு மிரட்டலாகக் காட்சியளிக்கிறார்.
மாஸ் மசாலா
கிராமப்புறத் திருவிழா பின்னணியில் ஒரு மாஸ் மசாலா
புதிதாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரின் பின்னணியில் குதிரை பொம்மைகள் மற்றும் மக்கள் கூட்டத்துடன் ஒரு உற்சாகமான கிராமப்புறத் திருவிழா காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது படம் ஒரு பக்காவான கிராமத்து ஆக்ஷன் கதையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி தனது எக்ஸ் தள பக்கத்தில், "தெலுங்கில் #கருப்பு என்பது #வீரபத்ருடு" எனப் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 2026 புத்தாண்டு அன்று சூர்யா வெளியிட்ட போஸ்டர் வைரலான நிலையில், இந்தத் தெலுங்கு டைட்டில் அப்டேட் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Karuppu in Telugu is #VeeraBhadrudu 💥💥 @Suriya_offl 🔥🔥 pic.twitter.com/EMAImCCQTM
— RJ Balaji (@RJ_Balaji) April 3, 2026
தயாரிப்பு
தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். குக்கு மற்றும் மற்ற ஹிட் பாடல்கள் மூலம் பிரபலமான சாய் அபியங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கிரண் கௌஷிக் மற்றும் ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கலைவாணன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சூர்யா மற்றும் திரிஷா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.