
சூர்யாவின் கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது
செய்தி முன்னோட்டம்
நடிகர் சூர்யாவின் நடிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. இந்த திரைப்படம் ஒரு பீரியட் ஃபிலிமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், படத்துக்கான VFX பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'கங்குவா'வின் பைனல் கட் வெர்ஷனை நேற்று படக்குழுவினர் பார்த்த நிலையில், இன்று டப்பிங் பணிகள் துவங்கி விட்டன.
மிகவும் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், பாலிவுட் நடிகை திஷா பட்டானி நாயகியாக நடிக்கிறார்.
அதோடு பாபி தியோல் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான 'அனிமல்' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர்.
படத்திற்கு இசையமைத்திருப்பது தேவி ஸ்ரீ பிரசாத்.
embed
கங்குவா படத்தின் டப்பிங்!
#CinemaUpdates | சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்திற்கான டப்பிங் பணிகள் தொடக்கம்!#SunNews | #Kanguva | #Suriya | @Suriya_offl | @directorsiva pic.twitter.com/7HBReExg3b— Sun News (@sunnewstamil) February 21, 2024