Loading...
அவர் ஒரு சொக்கத் தங்கம்: இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ
மறைந்த தேவாவுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், அவரை சொக்கத் தங்கம் என உருக்கமாகப் புகழ்ந்துள்ளார்.

அவர் ஒரு சொக்கத் தங்கம்: இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ

எழுதியவர் Vasuki
Oct 17, 2026
06:50 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் மாபெரும் இசை ஆளுமையான தேனிசைத் தென்றல் தேவா மாரடைப்பால் காலமான செய்தி அறிந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது நீண்டகால நண்பரான தேவா உடனான நினைவுகளைப் பகிர்ந்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கள்ளம் கபடம் இல்லாத ஒரு உண்மையான சொக்கத் தங்கம் என்று தேவாவைப் புகழ்ந்துள்ள ரஜினிகாந்த், அவரது மறைவு தனக்கு சொல்லொணாத் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேவாவின் பெருந்தன்மை

அண்ணாமலை, பாட்ஷா வெற்றிகள்

வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசிய ரஜினிகாந்த், "எனது இனிய நண்பர் தேவா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. எனது அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் படங்களுக்கு இசையமைத்தவர் அவர்".

"படையப்பா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்து அவரிடம் கூறியபோது, ரஹ்மான் வரட்டும். உங்களுடன் மூன்று படங்கள் பண்ணியதே எனக்குப் பெரிய பாக்கியம் என்று புன்னகையுடன் பெருந்தன்மையாகக் கூறினார்".

"கள்ளம் கபடம் இல்லாத ஒரு மிகச் சிறந்த மனிதர், உண்மையான சொக்கத் தங்கம் தேவா" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அஞ்சலி

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

மேலும் தேவாவின் ஆரம்பகால வாழ்க்கைப் போராட்டங்கள், சினிமாவில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அவர் எட்டிய மகத்தான வெற்றிகளையும் ரஜினிகாந்த் நினைவு கூர்ந்துள்ளார்.

தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் தேவாவின் பூதவுடலுக்குத் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் இசை உலகிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT