Page Loader
சுனைனா நடிப்பில் 'ரெஜினா' படத்தின் டீஸர் வெளியானது 
ரெஜினா படத்தின் டீசர்!

சுனைனா நடிப்பில் 'ரெஜினா' படத்தின் டீஸர் வெளியானது 

எழுதியவர் Arul Jothe
May 31, 2023
04:03 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டில் 2008ம் ஆண்டு 'காதலில் விழுந்தேன்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. கடைசியாக விஷாலுடன் 'லத்தி' திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட 'ரெஜினா' என்ற படத்தில், வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார் சுனைனா. மலையாள பட இயக்குனர் டொமின் டி சில்வா என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை 'எல்லோ பியர் புரொடக்ஷன்ஸ்' தயாரிக்கிறது மற்றும் படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளிலும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டீஸர் நேற்று(மே 30) வெளியானது. இதனை பிரபல கோலிவுட் நடிகர் ஆர்யா வெளியிட்டார். இந்த டீஸர் வெளியான சிலமணி நேரத்திலேயே வைரலாகி விட்டது .

ட்விட்டர் அஞ்சல்

ரெஜினா டீஸர்