Loading...
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: பிரதமர், முதல்வர்கள் விஜய் மற்றும் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுத்த புகைப்படங்கள் வைரல்
அனிருத் - காவ்யா திருமணம்: முதல்வர் விஜய்க்கு நேரில் அழைப்பு

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: பிரதமர், முதல்வர்கள் விஜய் மற்றும் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுத்த புகைப்படங்கள் வைரல்

எழுதியவர் Vasuki
Oct 17, 2026
12:06 pm

செய்தி முன்னோட்டம்

தென்னிந்தியாவின் முன்னணி ஊடக சாம்ராஜ்யமான சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதன்மை செயல் அதிகாரியுமான காவியா மாறன் மற்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமணப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்த இவர்களது காதல் தற்போது திருமணத்தை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ்களை வழங்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கிரீஸில் திருமணம்

நவம்பர் 21-ல் சென்னையில் வரவேற்பு

முன்னதாக இவர்களது திருமணம் செஷல்ஸ் தீவுகளில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அழகிய கடற்கரைகளும் பழங்காலக் கட்டிடக்கலைகளும் நிறைந்த ஐரோப்பிய நாடான கிரீஸில் (Greece) வரும் நவம்பர் 11-ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, உற்றார் உறவினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி (Reception) வரும் நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

புகைப்படங்கள் வைரல்

பிரதமர், முதல்வர்களுக்கு நேரில் அழைப்பு

இந்த சுபநிகழ்ச்சிக்காக, டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி தம்பதியினரும், அனிருத்தின் பெற்றோர் லட்சுமி - ரவிச்சந்தர் தம்பதியினரும் நேரில் சந்தித்து முதல் அழைப்பிதழை வழங்கினர்.

தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் நேரில் சந்தித்து வரவேற்பு அழைப்பிதழை வழங்கினர்.

ரேவந்த் ரெட்டியின் எக்ஸ் தளத்திலும் இச்சந்திப்பு அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து நாட்டின் முக்கிய விஐபிக்களைச் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT