Page Loader
STR 49: மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்; அதற்கு பேசப்பட்ட சம்பளம் இவ்வளவா?
சிலம்பரசன் நடிக்கும் STR 49 படத்தில் அவர் மீண்டும் ரீ-என்ட்ரி தரப்போகிறாராம்

STR 49: மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்; அதற்கு பேசப்பட்ட சம்பளம் இவ்வளவா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 17, 2025
02:18 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. சிலம்பரசன் நடிக்கும் STR 49 படத்தில் அவர் மீண்டும் ரீ-என்ட்ரி தரப்போகிறாராம். கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து அவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது குறித்து ரசிகர்கள் கொண்டாடி வரும் நேரத்தில், இப்படத்திற்காக அவருக்கு ரூ.13 கோடி சம்பளமாக பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சந்தனத்தை பெரியாத்திரைக்கு அறிமுகம் செய்த பெருமை சிம்புவிற்கு உண்டு. தன்னுடைய மன்மதன் படத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். தொடர்ச்சியாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களிலும் சந்தானத்திற்கு வாய்ப்பு தந்தவர் சிம்பு. அதனால், STR49 படத்தில் அவர் மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

STR 49 குறித்த விவரங்கள்

STR 49இன் குழுவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இணைந்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியானது. பார்க்கிங் புகழ் ராம்குமார் பாலகிருஷ்ணன் STR49 படத்தின் இயக்குனர். தனுஷின் இட்லி கடை மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களை இயக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆகாஷ் பாஸ்கரன், STR49 படத்தையும் தயாரித்துள்ளார். இப்படத்தில் டிராகன் புகழ் கயாடு லோஹர் நடித்து வருகிறார். இதற்கிடையில், சிலம்பரசன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சிலம்பரசன் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தை நடித்து வருகிறார். இந்த படம் சிம்புவின் 50வது படம். இதனை தன்னுடைய ஆத்மன் சினி ஆர்ட்ஸ் மூலமாக தானே தயாரிக்கிறார் சிம்பு.