Page Loader
"இந்திய சினிமாவில் இசைக்கு சிறந்த பங்களிப்பு" அளித்ததற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு விருது
ஸ்டார் டஸ்டின் விருதை வென்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்

"இந்திய சினிமாவில் இசைக்கு சிறந்த பங்களிப்பு" அளித்ததற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு விருது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 02, 2023
05:24 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் 'ஸ்டார்டஸ்ட் மேக்னா' என்ற நிறுவனம், தனது 50-வது ஆண்டு வெள்ளிவிழாவை கொண்டாடும் விதமாக மும்பையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்து இருந்தது. அதில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அவ்விழாவில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஒரு விருது அளிக்கப்பட்டது. "இந்திய சினிமாவில், இசைக்கு சிறந்த பங்களிப்பு" என்ற அடிப்படையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இது பற்றி தனது சமூக வலைத்தளத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் பதிவிட்டு இருந்தார். பல ஜாம்பவான்கள் முன்னிலையில் தனக்கு இந்த விருதை வழங்கியதற்காக நன்றி தெரிவித்திருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத்.

ட்விட்டர் அஞ்சல்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்