ராஜமௌலி - மகேஷ் பாபுவின் 'வாரணாசி' ரிலீஸ் தேதி இதுதான்! 2027-ல் வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
'பாகுபலி' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' (RRR) படங்களின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் அடுத்த பிரம்மாண்ட படைப்பான 'வாரணாசி' படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் புதன்கிழமை, ஏப்ரல் 7, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக வாரணாசி நகரில் 'ஏப்ரல் 7, 2027' எனக் குறிப்பிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இன்று படக்குழுவினர் அதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். சுமார் ₹1,300 கோடி செலவில் உருவாகும் இது, இந்தியாவின் அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் படமாகும். அதோடு, ஐமேக்ஸ் (IMAX) 1.43:1 ஃபார்மட்டில் படமாக்கப்படும் முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
April 7th, 2027… #VARANASI. pic.twitter.com/9i5j1TZg5b
— rajamouli ss (@ssrajamouli) January 30, 2026
ஏன்
இந்த தேதி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
வர்த்தக நிபுணர்களின் கணிப்புப்படி, இந்தத் தேதி ராஜதந்திரத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 7 அன்று தெலுங்கு மற்றும் மராத்திய புத்தாண்டு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதனையடுத்து, அம்பேத்கர் ஜெயந்தி (ஏப்ரல் 14) & ராம நவமி (ஏப்ரல் 25) என தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் வருவதால், படத்திற்கு நீண்ட கால வசூல் வாய்ப்பு கிடைக்கும். இந்த படத்தில், மகேஷ் பாபு, 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் உலகப் பயணி மற்றும் காலம் கடந்து பயணிப்பவராகவும் நடிக்கிறார். பிரியங்கா சோப்ரா, 'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்தின் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய திரையுலகிற்கு திரும்புகிறார். பிரித்விராஜ் சுகுமாரன், 'கும்பா' என்ற சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வில்லனாக மிரட்டுகிறார்.