நடிகர் சங்க பொறுப்பாளர்களின் 3 ஆண்டுகளுக்கு பதவிக்காலம் நீட்டிப்பு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. நடிகர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதையடுத்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முதல் விஷயமாக நடிகர் சங்க நிர்வாக பொறுப்புகளில் உள்ளவர்களின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. தற்போது நடிகர் சங்க கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதை தொய்வின்றி நடத்தி முடிப்பதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடிகர் சங்க கட்டிடம் கட்ட வாங்கிய கடனை அடைக்க நட்சத்திர கலைவிழா நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.