Page Loader
சூது கவ்வும் படத்தின் 2ம் பாகம் - ஹீரோ யார் தெரியுமா? 
சூது கவ்வும் 2ம் பாகம் உருவாகிறது - ஹீரோவாக மிர்ச்சி சிவா நடிப்பதாக தகவல்

சூது கவ்வும் படத்தின் 2ம் பாகம் - ஹீரோ யார் தெரியுமா? 

எழுதியவர் Siranjeevi
Apr 14, 2023
12:57 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2013-ஆம் ஆண்டு, நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி வெற்றிகண்ட திரைப்படம் தான் 'சூது கவ்வும்'. டார்க் ஹுயுமர் ஜானரில் வெளிவந்த இந்த திரைப்படம், விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல். இந்த திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவுப்பெற்ற நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதில் 'மிர்ச்சி' சிவா நாயகனாக நடிக்கப்போகிறார். அதேபோல, கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டிக்கு பதிலாக, வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சூதுகவ்வும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 17 முதல் துவங்கும் எனவும் செய்திகள் கூறுகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post