Page Loader
சிறிய பட்ஜெட் படங்களை விற்பதில் ஓடிடி-யிலும் பிரச்னை: பா. ரஞ்சித் வருத்தம்
சின்ன பட்ஜெட் படங்களின் OTT விற்பனை குறித்து பேசிய பா.ரஞ்சித்

சிறிய பட்ஜெட் படங்களை விற்பதில் ஓடிடி-யிலும் பிரச்னை: பா. ரஞ்சித் வருத்தம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 30, 2023
06:44 pm

செய்தி முன்னோட்டம்

சிறிய பட்ஜெட் படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்க விரும்புவதில்லை என இயக்குனர் பா. ரஞ்சித் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ரஞ்சித்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷான் இயக்கத்தில், யோகி பாபு நடித்துள்ள படம், 'பொம்மை நாயகி'. அந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில், "OTT அறிமுகம் ஆன புதிதில், சிறிய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மக்களும் சின்ன பட்ஜெட் படங்களை OTT -யில் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தனர்". "ஆனால் இப்போது சிறிய படங்களை ஓடிடி தளங்களில் விற்பது கடினமாக உள்ளது. நெட்பிளக்ஸ், அமேசான் என எதுவாக இருந்தாலும் வருடத்திற்கு 12 படங்கள் வாங்குகிறார்கள் என்றால், அந்த 12 படங்களும் பெரிய நடிகர்களின் படங்களாகத்தான் உள்ளன. திரையரங்குகளிலும் சிறு படங்களுக்கு திரைகள் கிடைப்பதில்லை," என்று ஆதங்கத்துடன் பேசினார்.

ட்விட்டர் அஞ்சல்

பா. ரஞ்சித் வருத்தம்